• Dec 02 2024

காணாமல் போன தீபா; கார்த்திக் கையில் சிக்கிய கடிதம்! அதிர்ச்சியில் ஐஸ்வர்யா! அதன்பின் நடக்கும் டுவிஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடு பற்றி பார்க்கலாம்.

இதுவரையில்,  தீபா காணாமல் போக கார்த்திக் எல்லா இடத்திலும் தேடி டென்ஷன் ஆன நிலையில் ரூமுக்கு செல்லும் போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறான். 

இதை தொடர்ந்து, அந்த லெட்டரை எடுத்து வாசிக்கும் போது,'என்னுடைய  மன நிம்மதிக்காக ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு வேண்டுதல் செய்ய போறன். என்ன யாரும் தேட வேண்டாம் மீண்டும் நானே வந்து விடுவேன்' என எழுதி வைத்திருக்கிறார்.

மேலும் அந்த லெட்டரில் நான் கொண்டு வந்த சிலையை மண்ணுக்குள் புதைக்கும் அளவிற்கு என் மீது என்ன வன்மம்? ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு புரியவில்லை என எழுதி இருப்பதை பார்த்த கார்த்தி, ஐஸ்வர்யா மீது மிகவும் கோபம் கொள்கிறான். 


உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க. உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமக தானே என கேள்வி கேட்கிறான்.

இதை அடுத்து, கார்த்திக்கிடம் கூறிய ஐஸ்வர்யா 'நான் ஒன்றும் செய்யல' என்று சொல்ல, 'நீங்கதான் கோவில் திருவிழாவில் தீபாவை கொலை செய்ய முயற்சி செய்தது' என்றது எனக்குத் தெரியும் என உண்மையை போட்டு உடைக்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார்.

ஐஸ்வர்யா சின்ன சின்ன தப்பு பண்ண கூடியதுதான் ஆனால் கொலை முயற்சி எல்லாம் செய்திருக்க மாட்டா என்று அருண் சப்போர்ட் பண்ணி பேசுகிறான். உடனே அங்கு வரும் அபிராமி இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement