• Oct 30 2024

'நீங்க தானே புல்லி கேங்' ஓட்ட வாயாக உளறிக் கொட்டிய ஸ்ருஷ்டி! பூர்ணிமா சொன்ன பதில்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதியாக தீபாவளி கொண்டாட்டங்கள் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இடையே ஆட்டம் பாட்டமென வீட்டாரின் விருந்துகளோடு கொண்டாடப்பட்டது.

அத்துடன், தீபாவளி தினத்தன்று பிக்பாஸ் வீட்டிற்குள் புகழ் மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.இவர்கள் இருவரும் பிக் பாஸ்போட்டியாளர்களுடன் சாதாரணமாக பேசி சிரித்ததை நாம் பாத்திருப்போம்.


இந்த நிலையில்,nமாயாவை பார்த்து ஸ்ருஷ்டி சொன்ன கமெண்ட் பூர்ணிமாவை கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளது.


அதன்படி மாயாவை பார்த்து, நீ நலமாக இருக்கிறாயா? என்று கேட்க, நான் நலமாக இருக்கன். நீங்க நலமாகத்தானே இருக்கிறீர்கள் என்று பதிலுக்கு கேட்டார் மாயா. இதற்கு பதிலளித்த ஸ்ருஷ்டி இல்லை.. நீங்கள் நலமாக இருப்பது போல எனக்குத் தெரியவில்லை என்றார். அதற்கு மாயா, எனக்கும் உங்களை பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது என்று சொன்னார். அதற்கு ஸ்ருஷ்டி.. இல்லை நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்ல, நானும் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் மாயா.. 

இதைப்பார்த்த ஸ்ருஷ்டி.. அம்மாடி.. நீ ரொம்ப கடினமாக இருக்கிறாய்.. உன்னை புரிந்து கொள்வது கஷ்டம் (க்ராக்) என்று சொன்னார். மேலும் பேசிய ஸ்ருஷ்டி உங்களை உத்வேகப்படுத்தலாம் என்று நான் உள்ளே வந்தால், என்னையே மாயாவை வைத்து புல்லிங் செய்ய வைக்கிறீர்கள் என்றார். இதைக்கேட்ட பூர்ணிமா ஸ்ருஷ்டியை முறைத்து பார்த்து, அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீர்கள் என்று சொல்ல, என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. நான் அந்த வார்த்தையை வாபஸ் செய்து கொள்றேன் என்றார்.

Advertisement