• Feb 06 2025

மீனாவுக்கு கிடைத்த பெரிய ஆர்டர்.. கையேந்தப்போகும் முத்து.? வித்யாவுக்கு வந்த டவுட்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், சிட்டியை  பார்த்துவிட்டு ரோகிணியும் வித்யாவும் வரும்போது சிட்டி விரைவிலேயே முத்துவிடம் மாட்டப் போகிறான் என்று வித்யா ரோகினிக்கு சொல்லுகின்றார். மேலும் அந்த நேரத்தில் மீனா அந்த வழியாக செல்ல, உடனே அவரை நிறுத்திய வித்யா அவருடன் தனியாக கதைக்கின்றார்.

அதாவது நம்மளுக்கு புடிச்சவங்க கிட்ட எப்படி போன் நம்பர் வாங்குவது என்று தெரியவில்லை. அதனால் தான் உங்ககிட்ட கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு மீனா அவர் உங்களை அடுத்த முறை பார்க்க வரும்போது எதற்காக என்ன பாக்க வர்றீங்க என்று கேட்டு போனை வாங்கி எடுங்கள் என்று ஐடியா கொடுக்கின்றார்.

இதைப் பார்த்த ரோகினி, வித்யாவை அழைத்து என்ன ரகசியம் பேசுகிறாய் என்று கேட்க, அது கொஞ்சம் பெர்சனல்.. உனக்கு டைம் வரும் போது சொல்லுகின்றேன் என்று சொல்லுகின்றார். ஆனாலும் இப்போது என்னிடம் நீ எதுவும் சொல்வதில்லை என ரோகிணி அவருக்கு திட்டுகின்றார்.


அதன் பின்பு செல்வமும் முத்துவும் சாப்பிட சென்ற இடத்தில் ட்ராபிக் அதிகாரி அப்செட்டாக காணப்படுகின்றார். ஆனால் அங்கிருந்த முத்து அவரை சீண்டிப் பார்க்கின்றார். இதனால் கோபப்பட்ட டிராபிக் அதிகாரி முத்துவின் சட்டை பிடிக்க, நான் எனது நண்பருடன் தான் கதைத்தேன். என்னை இப்படி எல்லாம் செய்தால் பப்ளிகை டிஸ்டர்ப் பண்ணியதாக உங்களுக்குத் தான் பிரச்சனை வரும் என்று சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து மீனா அவருடைய அம்மாவை பார்க்க செல்கிறார். அங்கு வந்த சத்யா உனக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்குது செய்றியா என கேட்டு அவருக்கு ஒரு ஆர்டரை எடுத்துக் கொடுக்கிறார். 


இதனால் வீட்டுக்கு வந்த முத்து மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்க, சத்தியா ஒரு ஆர்டர் எடுத்து தந்ததாகவும் அதற்கு அதிக அளவில் காசு செலவாகும் என்று சொல்லுகின்றார். மேலும் ஸ்ருதி ரவியிடம் காசு கேட்டு பார்க்கலாமா? என மீனா கேட்க,  முதலில் வேண்டாம் என்று சொன்ன முத்து பிறகு தானே கதைத்துப் பார்க்கிறேன் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement