பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி கமலாவின் வீட்டிற்குள் ராதிகாவை தேடுகின்றார். ஆனால் அவர்கள் இல்லை. கமலா உண்மையாகவே அவர்கள் இருவரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நானும் இங்கே இருக்க மாட்டேன்.. சந்துரு வந்தவுடன் நானும் கிளம்பி விடுவேன் என்று சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் ராதிகா மயூவை கடற்கரைக்கு கூட்டிக்கொண்டு அவருடன் மனம் விட்டு பேசுகின்றார். அதில், தான் ஆரம்பத்தில் கோபியை காதலித்தபோது அது பாக்யாவின் கணவர் என்று எனக்கு தெரியாது.. அது தெரிந்த பிறகும் அவரை விட்டு விலக முடிவெடுத்தேன் ஆனால் அதுவும் முடியவில்லை.
d_i_a
அதற்குப் பிறகு அவரை உனக்கு அப்பாவாக அறிமுகம் செய்தேன். ஆனால் அது இதுவரையில் நிறைய கஷ்டங்களை நீயும் அனுபவித்து விட்டாய்.. இனி அவர் எங்களுடைய வாழ்க்கையில் வேண்டாம்.. இதை உனக்கு ஏற்றுக் கொள்ள கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று பக்குவமாக சொல்கின்றார்.
அதற்கு மையூவும் நீங்க என் கூட இருந்தா போதும் என்று சொல்ல, உன்னை ஸ்கூல் மாற்றினாலும் பரவாலையா என்று கேட்கின்றார். அதற்கும் உங்க கூட இருந்தா போதும் என்று சொல்ல, மற்ற பிள்ளைகள் எல்லாம் எவ்வளவோ அடம் பிடிக்கும்.. புரிந்து கொள்ள மாட்டார்கள்.. ஆனா நீ மட்டும் ஏன் இப்படி இருக்கின்றாய் என்று மையூவை பாசத்தால் கட்டியணைக்கின்றார்.
அதன் பின்பு போஸ்ட் வருகிறது. அதை கோபி இல்லாத நிலையில் பாக்கியா வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் வர அவரிடம் போஸ்ட்டை கொடுக்க அவர் அதை வாங்கிக் கொண்டு சோபாவில் சோகமாக இருக்கின்றார்.
இதன் போது அங்கு வந்த ஈஸ்வரி ராதிகாவை பார்த்தியா? என்ன சொன்னார் என விசாரித்துக் கொண்டிருக்க, அவரை பார்க்கவில்லை என சொல்லுகின்றார் கோபி. ஆனால் அதற்கும் ராதிகாவை திட்டுகிறார் ஈஸ்வரி.
இறுதியாக கோபி மேலே செல்ல வெளிக்கிட, இனியா இது கோர்ட்டில் இருந்து வந்ததாக கடிதத்தை கொடுக்க அதை வாங்கி பார்த்த கோபிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.. அதாவது ராதிகா டிவோஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் நெஞ்சை பிடித்துக் கொண்டு கோபி அமர, ராதிகா என் பிள்ளையை கொல்லாமல் விடமாட்டார் என்று ஈஸ்வரி புலம்புகிறார். பாக்கியா ராதிகாவுக்கு போன் பண்ணி பார்க்கவும் அவருடைய போன் வேலை செய்ய இல்லை. அங்கிருந்த இனியா தனது அம்மா இவ்வளவு நல்லாவார்களா இருக்காங்க என புகழுகின்றார். இதன் இன்றைய எபிசோட்.
Listen News!