• Jan 18 2025

Maya ஆயா மாதிரி பேசுது; எல்லாம் காசுக்காக தான்! விசித்திராவ அப்படி பாக்க முடியல! Feel பண்ணும் ஷகிலா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயாவின் புள்ளி கேங் செய்யும் அநியாயங்கள் தொடர்பில் ஷகிலாவும் மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய அவர், 'தூக்கு தண்டனை கைதிக்க கூட கடைசி நேரத்துல என்ன ஆசை என்று கேட்பாங்க. ஆனா இவ்வளவு பெரிய ஷோல இருந்து இவ்ளோ பெரிய குற்றச்சாட்டோட வெளிவந்த பிரதீப்க்கு அவர் தரப்பு நியாயத்தை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கல.இதுல கமல் சார திட்டி ஒரு பிரயோஜனம் இல்ல, இந்த ஷோவ நடத்துறவங்களை தான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு அசிங்கத்தோட அவமானப்பட்டு நான் வெளியில வந்து இருந்தேன்னா நான் கண்டிப்பா தூக்கில் தொங்கி இருப்பேன்' என அண்மையில் சொல்லி இருந்தார்.


இவ்வாறான நிலையிலேயே மீண்டுமொரு பேட்டி வழங்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், மாயா ஆயா மாதிரி பேசுது. அவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்கு. ஆனா அது அசிங்கமா இருக்கு. பேசிக் அறிவு கூட இல்ல அந்த பொண்ணுக்கு. இவங்க பணத்துக்காக தான் அப்படி பண்றாங்களா என தோணுது. அங்க விசித்திரா அவமானப்படுறது என்னால தாங்கள..


அத்தோட, ஜோவிகா என்ன பெரியம்மா என்று தான் கூப்பிடுவா..ஆனா அங்க என்ட பெயர சொல்லி கதைக்கிறா.நான் எப்படி இத விடுவன். அவள் மேல எனக்கு உரிம கூட. அவள திருத்த தான் பாப்பன்... அதே போல பிக் பாஸ் வீட்டுல போட்டியாளர்கள எடுக்கும் போது விசித்திராட வயசுல எடுக்கலாம் தானே..அங்க யாரும் காதல் கீதல் என்று சுத்த மாட்டாங்க' என தன்னுடைய கோவத்தை கொட்டித் தீர்த்துள்ளார் ஷகிலா.

Advertisement

Advertisement