• Jan 19 2025

பூர்ணிமாவின் கட்டிப்பிடி வைத்தியம்; அந்த பீலிங் எனக்கு தெம்பா இருந்துச்சு! ஆபாசமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் சர்ச்சைகளுக்கு மத்தியில்  சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்ரம், பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரவண விக்ரம் தனியாக பேசும் போது, தனது ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த சீசனில் டைட்டில் வின்னராக தான் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களும், கிண்டல்களும் கிடைக்கும் அளவுக்கு வைரலாக பரவியது. 


இதனிடையே தற்போது மற்றுமொரு ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி இருந்தேன்.நீ கட்டிப்பிடித்த பின் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது. அது என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. உன்னை எனக்கு ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். என்று கூறியிருந்தார்.

சரவண விக்ரமின் இந்த பேச்கை கேட்ட பூர்ணிமா மகிழ்ச்சியில் அவரின் கையை பிடித்து, சிரிப்பை வெளிப்படுத்தினார். 


இதனைத் தொடர்ந்து சரவண விக்ரம் குறித்து பூர்ணிமா பெருமையாக பேசும் வீடியோகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement