• Dec 04 2023

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மூக்குடைந்த பிரதீப்; இனி வாய்ப்பே இல்லை! அவரே போட்ட ட்வீட்! கேம் ஓவர் தானா..?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு பிரதீப் ஆண்டனியால் பாதிப்பு இருக்கு என கூறி கமல்ஹாசன் பிரதீப்பை வெளியே அனுப்பினார்.வெளியே வந்த பிரதீப்க்கு வெளியில் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது. 

இந்த நிலையில், தனக்கு வெளியில் ரசிகர்கள் தரும் ஆதரவை பார்த்து ஹேப்பியான பிரதீப், மீண்டும் ஒரு வாய்ப்புக் கேட்டு ட்வீட் போட்டிருந்தார். 


எனினும்,  மீண்டும் உள்ளே வர வாய்ப்பே இல்லை ராஜா என பிக் பாஸ் நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரானவன் என தன் மீது சுமத்தப்பட்ட சிகப்பு கறையை போக்க பிரதீப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தமது கருத்துக்களை கூறி வருகின்றனர். 

இதேவேளை, பிரதீப் மீண்டும்  வரக் கூடாது என்பதில் கமல் உறுதியாக இருந்தாரா? அல்லது நிகழ்ச்சி நிர்வாகம் எடுத்த முடிவா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement