• Jan 19 2025

மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்- நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!

மன்சூர் அலி கான் ஆபாச காட்சிகளில் த்ரிஷாவுடன் பெட்ரூமில் நடிக்க வேண்டும் என படு கேவலமாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் பேச்சுக்கு, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி, நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் கூறி இருபதாவது, "மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். 


திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறி நிற்கின்றனர். 

சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய திரு. மன்சூர் அலிகான் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது.  ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.


மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.

  இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய  நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement