தமிழ் சினிமாவில் கடலோரக் கவிதைகள் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் நடிகர் இளவரசு. தொடர்ந்து காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என பல்வேறு கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.
சென்னை 28, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, திருவிளையாடல் ஆரம்பம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி, கலகலப்பு போன்ற படங்களில் இவருடைய நடிப்பு அதிக அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் ஒரு காட்சியில் இளவரசு செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருப்பார். இவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகர் இப்படி செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எல்லோருக்குமே இருந்திருக்கிறது. இந்த காட்சியை பற்றி சக நடிகர்கள் அவரிடம் எப்படி இது போன்ற ஒரு சீனில் நடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு இளவரசு நடிப்புன்னு வந்துட்டா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தான் வேண்டும். இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு எல்லாம் வருத்தப்படக்கூடாது. அப்படி வருத்தப்பட்டு நடித்துவிட்டு வாங்குகிற சம்பளத்தில் சாப்பாடு சாப்பிட்டால் செரிக்காது. செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருப்பது தான் நியாயமான விஷயம் என்று சொல்லி இருக்கிறார்.
Listen News!