• Jan 19 2025

வேலை கிடைச்சிருச்சு, ஆனால்.. மனோஜ் கொடுத்த அதிர்ச்சி.. முத்து, அண்ணாமலை கிண்டல்..! ‘சிறகடிக்க ஆசை’ புதிய புரமோ..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறக்கடிக்க ஆசைஎன்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் மனோஜ் தனக்கு வேலை போய்விட்டது என்பதை மனைவி ரோகினி இடம் கூற, அவர் திட்டிய காட்சிகளை பார்த்திருப்போம்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், கனடாவில் தனக்கு வேலை கிடைத்து விட்டதாக மனோஜ் கூற, வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ரோகினியும் மனோஜை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

இந்த நிலையில்விசா வர எப்படியும் ஒரு வாரம் ஆகும்என்று ரோகிணி சொல்ல அதற்கு மனோஜ்வேலை கிடைச்சிட்டா ஒரு வாரத்தில் வந்துரும்என்று கூறுகிறார். அப்போது மீனாவேலை கிடைச்சுட்டாவா? இப்பதான் வேலை கிடைச்சிருச்சுன்னு என்று சொன்னாருஎன்று கூற அதற்கு மனோஜ் ’14 லட்ச ரூபாய் கட்டினால் எனக்கு வேலை கிடைக்கும்என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு முத்து மட்டும் அண்ணாமலை விழுந்து விழுந்து சிரிக்க, முத்துகவலைப்படாதீங்க அப்பா, தினமும் இப்படி தான் மனோஜ் ஒரு கூத்து பண்ணிகிட்டே இருப்பான், நாமளும் தினமும் சிரிச்சிகிட்டே இருக்கலாம்என்று கூற முதல்முறையாக அண்ணாமலையும் மனோஜை கேலியாக பார்த்து சிரிக்கிறார்.

ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து முத்துவுக்கு கார் வாங்க பணம் கொடுத்து விட்ட நிலையில் தற்போது 14 லட்சத்துக்கு எங்கே செல்வது என்ற கேள்விதான் அனைவர் மனதில் எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மனோஜ் கனடா சென்றால் அவரிடம் 27 லட்சம் பணத்தை ஏமாற்றிய அவரது முன்னாள் காதலியை கனடாவில் கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே  இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் என்னென்ன திருப்பம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement