• May 07 2024

சமந்தாவுக்கு போட்டி நான் தான்.. நீச்சலுடையில் கலக்கும் பிக்பாஸ் நடிகை..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவை பரபரப்பாக வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சமந்தாவுக்கு போட்டியாக பிக் பாஸ் நடிகை ரைசா வில்சன் நீச்சலுடையில் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் நெட்டிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டாலும் தற்போது மீண்டு வந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் டூ பீஸ் நீச்சலுடையில்  இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில், அவரை முதல் முறையாக நீச்சலுடையில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்,

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்நீங்கள் என்னதான் நீச்சல் உடையில் போட்டோஷூட் எடுத்தாலும் சமந்தாவுக்கு இணையாக வர முடியாது என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த கோலத்தில் உங்களை புகைப்படங்கள் எடுத்த போட்டோகிராபர் மிகவும் அதிர்ஷ்டக்காரர் என்றும் கூறி வருகின்றனர். கோவாவில் சுற்றுலா சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் இந்த மேஜிக்கல் புகைப்படத்தை எடுத்தது தனது நெருங்கிய நண்பர் என்றும் இந்த பதிவில் ரைசா வில்சன் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement