• Apr 18 2026

இனி அஜித், விஜய், சூர்யா தான்.. பெரிய நடிகர்களுக்கு குறி வைக்கும் பிரியா பவானிசங்கர் ..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்தாலும் அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களுடன் இன்னும் நடிக்கவில்லை என்பதால் அடுத்த கட்டமாக தனது படங்கள் மாஸ் நடிகர்களுடன் நடிக்கும் படமாக இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 
தற்போது கமல்ஹாசனின்இந்தியன் 2’ அருள்நிதியின்டிமான்டி காலனி 2’ விஷாலின்ரத்னம்போன்ற தமிழ் படங்களிலும்பீமா’ ‘ஜீப்ராஉள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்தாலும் பெரிய நடிகர்களுடன் இன்னும் பிரியா பவானி சங்கர்  ஜோடி போடாத நிலையில் அடுத்த கட்டமாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடிக்க முயற்சி செய்து வருவதாகவும் இதற்காக பெரிய நடிகர்களுக்கு தூது விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் அடுத்த படத்திலும், அதேபோல் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவர் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement