• Jan 18 2025

ரோகிணி எடுத்த முடிவால் சிக்கிய மனோஜ்.. கோவிலில் அசிங்கப்பட்ட விஜயா!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா தனது நகைகளை எல்லாம் மீனாவின் முகத்தில் வீசி எறிந்து விட்டு, நான் இந்த பூக்காரிகிட்ட தாழ்ந்து போக மாட்டேன் மன்னிப்பும் கேட்க  மாட்டேன் என மீண்டும் ரூமுக்குள் போய் கதவை சாத்திக் கொள்கிறார்.

அதன் பின்பு ரோகினி அந்த நகைகளை எடுத்து அண்ணாமலையிடம் மனோஜ் பண்ண தப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த நகைகளை அத்தையிடமே கொடுக்கிறேன். அந்த காச நான் கொடுக்கிறேன் ஆனால் கொஞ்சம் டைம் கொடுங்க என சொல்ல, முத்துவும் சரி என சொல்லுகிறார்.

இதைத் தொடர்ந்து ரோகினி விஜயா ரூமுக்கு சென்று நகைகளை போட்டுக் கொள்ளுமாறு கொடுக்க அவர் வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் பிறகு எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் என ரோகிணி நகைகளை வைத்து விட்டு வர, மனோஜ் எல்லாம் என்னால தானே என விஜயா பக்கத்தில் இருந்து சொல்லுகின்றார். அதற்கு விஜயா எல்லாம் உன்னால தான். நான் உன்னால பெருமைப்படுவேன் என்று பார்த்தால் நீ என்னை அவமானப் படுத்துற என சொல்லுகிறார்.

அதன் பின்பு மனோஜ் ரோகிணி இடம் அம்மாவின் நகைகளை கொடுத்திருக்கலாமே இப்ப எப்படி காசு கொடுப்பா என்று கேட்க, ரோகிணி கோவத்தில் செல்கிறார்


இன்னொரு பக்கம் மீனா மொட்டை மாடியில் நின்று நடந்தவற்றை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அவருக்கு முத்துவும், ஸ்ருதியும் சமாதானம் சொல்லுகிறார்.

இதை அடுத்து பார்வதியும் விஜயாவும் கோவிலுக்கு போக அங்கு சுதா வருகிறார். மேலும் விஜயா கையில் நகைகளை போடாததை பார்த்து ஏன் நகைகளை போடவில்லை எங்களுக்கு கவுரவ குறைச்சல் ஆகிவிடும் அடுத்த முறை போடுங்கள் என சொல்ல, விஜயா மறந்துட்டேன் என்று சமாளிக்க, வயசாயிட்டுதானே என சுட்டிக்காட்டுகிறார் சுதா.

இறுதியாக அண்ணாமலை வீட்டில், முத்துவையும் மீனாவையும் அமர வைத்து விஜயா செய்வதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் என சொல்லுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement