• Jan 19 2025

மனோஜ் மண்டையில் அடித்த மீனா... உறிமுட்டியை உடைத்த முத்து... கலகலப்பாக வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்காக பாட்டியின் ஊருக்கு சென்றுள்ள முத்துவின் குடும்பம் அங்கு பொங்கல் கொண்டாடுவதோடு மலேஷியாவில் இருந்து வந்த ரோகிணியின் மாமா உண்மையானவரா? என்பதை கண்டு பிடிக்கும் விறுவிறுப்பான கட்டத்தில் கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது. 


இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவில் பொங்கல் கொண்டாடிய பிறகு போட்டிகள் வைக்கபடுகிறது. அதில் பாட்டி நடுவராக இருந்து  அண்ணாமலை டீம்ல பொண்ணுங்கள் எல்லாரும் இருங்க விஜய்யா டீம்ல பசங்க எல்லாரும் இருங்க வெற்றி பெற போறது யார் என்று பார்ப்போம் என கூறுகிறார். 


மருமகள்மார் அண்ணாமலை அணியிலும் மகன்மார்கள் விஜய்யா அணியிலும் இருக்கின்றனர். அப்போது முட்டிஉடைத்தல் போட்டி வைக்க படுகிறது அதில் மனோஜ் முதலாவதாக அடிக்க விஜய்யா எகிறி அடிடா என சப்போட் செய்கிறார். அடுத்து ரோகிணி முயற்சிக்கிறார், அடுத்ததாக மீனா முட்டியை அடிக்க கம்பை எரிய அது  மனோஜின் தலையில் அடிபட்டு விடுகிறது. 


இப்படி ஒவ்வொருவரும் விளையாடுகின்றனர் ஆனால் யாரும் முட்டியை அடிக்க வில்லை இறுதியாக முத்துவை பாட்டி அடிக்க சொல்கிறார் அப்போது முத்து சரியாக முட்டியை உடைத்து வெற்றி பெற்று விட்டார். அவரை அனைவரும் தூக்கி பாராட்டுகின்றனர். இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  

Advertisement

Advertisement