• Jul 27 2024

நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 ரெடி... இதோ சூப்பரான புது அப்டேட்... வில்லன் யார் தெரியுமா?

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அதன் இரண்டாம் பாகம் வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். தற்போது அந்த படம் பற்றி ஒரு புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி ஷூட்டிங் பூஜை உடன் தொடங்குகிறதாம்.


முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தினை அதிக பட்ஜெட்டில் எடுக்க போகிறார்கள் என்றும், இந்திய அளவில் பாப்புலர் ஆன pan இந்தியா நடிகர்கள் சர்தார் 2ல் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.


வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், சர்தார் 2க்கு யுவன் தான் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் கூடிய விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும். 


Advertisement

Advertisement