• Jan 19 2025

கொளுத்துடா பட்டாச.. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகருக்கு களைகட்டிய திருமண கொண்டாட்டம்! பொண்ணு யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

'டாடா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இந்த படத்தில் நடித்ததன் பின்பு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறிவிட்டார்.

2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நியான் பிரகாஷன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். அதைத் தொடர்ந்து பிரியன் ஒட்டத்திலானு, சீக்ரெட் ஹோம் ஆகிய மலையாள படத்திலும் ஆதிகேஷவா என்ற தெலுங்கு படத்திலும், விஜய் நடித்த பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.

கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாடா  திரைப்படம் இவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் பல நாட்கள் ஓடியது.


இதே தொடர்ந்து மீண்டும் நல்ல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.

இவர்கள் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது அபர்ணா தாஸ் - தீபக் பரம்பொல் ஜோடிக்கு இன்றைய தினம் திருமணம் நடைபெற்ற  நிலையில், அவர்களின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதைப் பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை மணமக்களுக்கு தாராளமாக தெரிவித்து வருகின்றார்கள். இவர்களின் திருமண கொண்டாட புகைப்படங்கள்  தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement