• Jan 16 2026

"சூது கவ்வும்" படத்தால் 4 வருஷம் வேலையில்லாமல் இருந்தேன்... மணிகண்டன் ஓபன்டாக்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பு மற்றும் கலை வளர்ச்சியைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய நடிகர் மணிகண்டன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ரசிகர்களுக்கு தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் தனது ஆரம்ப கால நடிப்பு, சில முக்கிய வாய்ப்புகளை விட்டுச்செல்ல வேண்டிய நிலைகள் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.



அந்நேர்காணலின் போது மணிகண்டன், " சூது கவ்வும் படத்தில எந்த ரோல் வேணா நடிங்கன்னு வாய்ப்பு தந்தாங்க அந்த சமயத்தில நான் "நரை எழுதும் சுயசரிதம்" எழுதிட்டு இருந்தேன்.. அதை முடிச்சிட்டு வரேன்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள படமே முடிஞ்சிடுச்சு. அதுல நடிச்சவங்க எல்லாரும் பெரிய ஆள் ஆகிட்டாங்க. 


இப்படி ஒரு வாய்ப்பை விட்ட நீ உருப்பிடவே மாட்டன்னு எல்லாரும் திட்டினாங்க... அந்த வருத்தத்தில 4 வருஷம் வீட்டில சும்மா உட்காந்திருந்தேன். அப்புறம் "காதலும் கடந்து போகும்" படத்தில நடித்தேன். அதுக்கப்புறம் தான் நடிப்பை சீரியஸா எடுத்தன்." என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், நடிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதும், அதனை விட்டுவிடுவது எவ்வளவு சோககரமானதாக இருக்கக்கூடும் என்பதையும் மனிகண்டன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement