• Jan 19 2025

உலக்கையால ஓங்கி ஒரே ஒரு குத்து.. விஜயா வீட்டில் மீண்டும் வெடித்த பிரச்சனை! அசிங்கப்பட்ட முத்து

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், விஜயாவுக்கு பிரியாணி சாப்பிட்டது இன்னும் சரி ஆகாததால் பார்வதியும் அவருடைய முதுகில் போட்டு குத்துகிறார். ஆனாலும் சரி வரவில்லை. அதற்கு முத்து, பாட்டி சொன்ன வைத்தியத்தின் படி உலக்கையை எடுத்து குத்தணும் என சொல்ல, அதிர்ச்சியில் விஜயா எல்லாம் சரியாகி விட்டது என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து, விஜயா வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா, தாலி பிரித்து கோக்குறதுக்கு ஹோட்டல் எல்லாம் பார்த்தாச்சு எல்லாம் புக் பண்ணியாச்சு என சொல்லிவிட்டு, முத்து வந்தால் பிரச்சனையாகும் அதனால் அவர் வராமல் இருப்பது தான் நல்லம் என்பது போல் சொல்லாமல் சொல்ல, புரியிது சம்பந்தி எனக்கு என்ன பண்ணனும் என்று தெரியுமென விஜயாவும் சொல்லுகிறார்.

அண்ணாமலை வீட்டுக்கு வர வாசலிலே வைத்து அவர் வியர்வை எல்லாம் துடைத்து உபசரிக்கிறார். அண்ணாமலை நேரடியாகவே என்ன விஷயம் எனக்  கேட்க, ஸ்ருதியின் அம்மா வந்ததாகவும் அவங்க முத்து வந்தா பங்க்ஷன் நல்லா நடக்காது என பயப்படுவதாகவும், இதனால் முத்து பங்க்சனுக்கு வர வேண்டாம் என்றும் சொல்கிறார்.


இதைக்காட்டு மீனாவும் கோபப்பட, அண்ணாமலையும் முதலில் விஜயாவை திட்டுகிறார். ஆனாலும் விஜயா எங்க வீட்டு பங்க்ஷன்ல கூட  முத்துவாலத்தான் பிரச்சனை வாரது. அதனால் தான் அவங்க அம்மா பயப்படுற என்று சொல்ல, அந்த இடத்திற்கு முத்துவும் வர அண்ணாமலை முத்து பங்ஷனுக்கு வர மாட்டான் என சொல்கிறார். இதை கேட்டு விஜயா மகிழ்ச்சி அடைகிறார்.

மேலும், முத்து பங்ஷனுக்கு வரமாட்டான், நானும் வரமாட்டேன் என அண்ணாமலை சொல்லுகிறார். இதை தொடர்ந்து மீனாவும் நானும் வரமாட்டேன் என சொல்ல, விஜயா அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் அண்ணாமலையை வர சொல்ல, முத்துக்கு மரியாதை இல்லாத இடத்தில் தானும் வரமாட்டேன் என சொல்லுகிறார்.

அந்த இடத்திற்கு ரவியும் ஸ்ருதியும் வர, ரவியிடம் நடந்தவற்றை அண்ணாமலை சொல்ல, உங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணினான் என மனம் உருத்திட்டு இருந்துச்சு. இதுல நீங்க எல்லாருமே கலந்து கொள்ளணும். முத்து வரலைன்னா இந்த ஃபங்ஷனை வேண்டாம் என ரவியும் சொல்லுகிறார். 

இறுதியில் ஒன்று பண்ண முடியாமல் ஃபங்ஷனுக்கு எல்லாரும் வருவதாக விஜயா ஸ்ருதியின் அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லுகிறார்.

இதைக் கேட்ட ஸ்ருதியின் அம்மா மகிழ்ச்சியில் இதை வச்சுத்தான் ரவிய பிரிக்கணும், முத்துவ அசிங்கப்படுத்தோணும், அவன் பிரச்சனை பண்ணலாட்டியும் நான் பிரச்சனை பண்ண வைப்பேன்  என ஸ்ருதியின் அப்பாவிடம் பேசிக்கொள்கிறார்.இதுதான் இன்றைய  எபிசோட்.

Advertisement

Advertisement