• Aug 03 2026

கஜினி படத்திலிருந்தே சூர்யா மீது கிரஷ் – மனம் திறந்த மமிதா பைஜு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை மமிதா பைஜு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சுனில் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை மமிதா பைஜு, சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த ஒரு விஷயத்தையும் மேடையிலேயே வெளிப்படையாக கூறினார்.

அவர் பேசுகையில், "சூர்யா சாரை பார்த்து தினமும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். இதற்கு முன்பும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். இந்த முறை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்றார்.


அதனைத் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "கஜினி படத்தில் இருந்தே சூர்யா சார் மீது எனக்கு கிரஷ் இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த படம் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்" என்று மனம் திறந்து பேசினார்.

மமிதா பைஜுவின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், மமிதா பைஜு, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement