• Mar 09 2026

பவதாரணி மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காத முக்கிய ஹீரோக்கள்? மனசாட்சி மறுத்தது ஏன்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக காணப்படும் இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில்,  இலங்கையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் இருக்க கூடிய அவரது பண்ணை வீட்டில்  உறவினர், மக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இறுதியாக பவதாரிணி உடலுக்கு பட்டு சேலை போர்த்தி அண்ணன்கள் இறுதி சடங்கை செய்து, 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடலை ஒட்டுமொத்த குடும்பமும் பாடி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். 


இந்த நிலையில், பவதாரிணியின் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தாத, ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத முன்னணி நடிகர் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

அதன்படி, சூர்யா, அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் பலர் இறுதி அஞ்சலிலும் கலந்து கொள்ளவில்லை என்பதோடு, அவருக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

எனினும், கங்குவாவில் நடித்த வில்லன் பாபி தியோலுக்கு மட்டும் நடிகர் சூர்யா மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement