• Mar 31 2025

மதுரை முத்துவை நேரில் பார்த்த ரசிகை..! - கேரளா பாட்டியின் செயல்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மதுரை முத்துவை நேரில் காண வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களில் ஒருவரான கேரளா பாட்டி, தனது மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். கேரளாவில் இருந்து வந்த வயதான பாட்டி, தனது வாழ்நாளின் சிறப்பாக மதுரை முத்துவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே தனது பெரிய ஆசையாக இருந்தது. இதை நினைத்தபடியே, தன்னுடைய குடும்பத்தாருடன் மதுரைக்கு நேராக பயணம் செய்து, நேரில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

முத்துவைப் பார்த்த பாட்டி “மதுரை முத்துவைப் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது!” என உணர்ச்சி பூர்வமாக கதைத்தார்.மேலும் பாட்டியின் முகத்தில் சந்தோஷக் கண்ணீர் வழிந்தது. அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய போது, அங்கு இருந்தவர்கள் அனைவரும் பெரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.


“நான் தொலைக்காட்சியில் முத்துவைப் பார்த்து ரசிக்கிறேன். ஆனால் ஒருமுறை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இன்று நடந்துவிட்டது. என் வாழ்க்கையில் இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு இருக்க முடியாது!” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

மதுரை முத்துவும் அந்த பாட்டியின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அவரிடம் பாசத்துடன் கைகுலுக்கி, அவரை மகிழ்ச்சியடைய செய்தார். அந்த பாட்டியின் கதை அங்கு இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நினைவாக மாறிவிட்டது. இந்த நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரும் இந்த பாட்டியின் ஆர்வத்தையும், மதுரை முத்துவின் அன்பையும் பாராட்டி வருகின்றனர்.



Advertisement

Advertisement