தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட பிரதீப் ரங்கநாதன், தனக்குக் கிடைத்த பெரிய மரியாதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஒரு வெற்றிக் கதாநாயகனாக மாறிய இவர், தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான டிராகன் படத்திற்கு பிரபல இயக்குநர் ஷங்கர், தனது வாழ்த்துக்களை தெரிவித்ததனால் பிரதீப் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இவருக்கு வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல், தன்னைப் பற்றி ஆராய்ந்து பேசுவது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது என்கிறார் பிரதீப். மேலும், “சார்.. உங்கள் படங்களைப் பார்த்து வளர்ந்த ஒரு ரசிகன் மற்றும் உங்களை முன்மாதிரியாகக் கொண்ட எனக்கு, இன்று உங்களிடம் இருந்து பாராட்டுக் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததே இல்லை!” என்றார்.
மேலும் “நீங்கள் எனக்குப் பிடித்த மிகப்பெரிய இயக்குநர் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுவது என்பது எனது மிகப்பெரிய கனவு! என் உணர்வு பூர்வமான வார்த்தைகளால் கூறினார். இந்த உணர்ச்சி நிறைந்த வார்த்தைகள், அவரது ரசிகர்களையும் பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இயக்குநர் ஷங்கர், பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டி கூறியது, அவரது இணையத்தள ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை தமிழ் சினிமாவின் புதிய மாற்றம் என கொண்டாடுகின்றனர்.
Listen News!