தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் துல்கர் சல்மான். இவர் தெலுங்கில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக காணப்படுகின்றார்.
துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
d_i_a
வித்தியாசமான திரைக்கதையில் அமைந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்திருந்தது. அதன்படி இந்த திரைப்படம் சுமார் 115 கோடிக்கு மேல் வசூலித்து 30 கோடி ரூபாய் லாபம் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் காணப்படுகின்றது. மேலும் 15 நாடுகளின் முதல் பத்து இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே வேளை சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் ரசிகர்கள் அளித்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஆல் வசூலில் தடுமாறியதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!