• Oct 13 2024

இன்னும் இரண்டு நாட்களில் வேட்டையன் கதற விடப்போறாரு.. வெளியான அதகள அப்டேட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே தமிழ் சினிமாவில் தனி மவுசு காணப்படும். 70 வயதை கடந்து இன்றளவில் மட்டும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார் ரஜினிகாந்த். அவருடைய நடையும் ஸ்டைலும் இன்றும் இளமையாகவே காணப்படுகின்றது. இதனாலையே பலர் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன் . இந்த படத்தை இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். இதன் காரணத்தினாலே இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

அது மட்டும் இல்லாமல் வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சுவாரியன், ரித்திகா சிங், பகத் பாசில் இவர்களுடன் அமிர்தாபச்சனும் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் காரணத்தினாலே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என மிகுந்த ஆவலாய் காத்துள்ளார்கள் ரசிகர்கள்.


இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் இரண்டாம் திகதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் நாளை மறுதினம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement