• Apr 02 2025

அப்பாஸ் கொடுத்த லிப் கிஸ் - இத்தனை மணித்தியாலங்களா!..... அந்த பொண்ணு தான் பாவம் உண்மையை உடைத்த நடிகர் ...

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

 இந்திய சினிமாத் திரையுலகில் குறிப்பாக 90 காலப்பகுதியில் பெண்கள் மத்தியில்  சாக்லெட் பாயாக வலம் வந்தவர் , நடிகர் அப்பாஸ். இவர் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே பல பெண்களின் மனதை திருடியவர். 


 பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோவாகவும் நடித்திருந்தார் தொடர்ந்தும்  தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்தார்.கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பம்மல் கே. சம்பந்தம் தான் அப்பாஸின் 25வது படமாகும். ரஜினிகாந்தின் படையப்பா படத்திலும் நடித்திருந்தார். தற்போது  இந்தி , தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் ஒரு நேர்காணலின் போது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார் . "45 நிமிடம் தொடர்ந்து லிப் லொக் முத்த காட்சியில் நடித்தேன். என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கூறியதை பார்க்கலாம் ,


" 45நிமிடம் முத்தம் கொடுத்தேன் , ஒரு பெஸ்ட் கிஸ். தமிழ் சினிமாவில் முத்த காட்சி இருக்கும் ஆனால் இப்பிடி தொடர்ந்து இருக்காது. அதுவும் நான் சாப்பிட்ட பிறகு சொன்னாங்க , இப்பிடி ஒரு லிப் லொக் சீன் இருக்கிறது என்று நான் நல்லா சாப்பிட பிறகு சொன்னதால நடிகை தான் பாவம் , நான் ஒருக்கா அவங்ககிட்டயும் கேட்க சொன்னன்.ஹீரோயினும் உடனே ஓம் சொல்லிட்டாங்க அப்புறமாக அந்த சீன் எடுத்தது .இப்பிடி 45 நிமிடமாக தொடர்ந்து கிஸ் பண்ணினது உண்மையிலேயே எனக்கு போரிங் . இவ்வாறாக அப்பாஸ் வெளிப்படையாக கூறிய இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 



Advertisement

Advertisement