• Jan 18 2025

அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்.. நான் அதில் பிஸியாக இருக்கிறேன்! சிம்பிள் போட்டோவுடன் ரவீனா ட்விட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வரலாற்றிலையே டைட்டில் வின்னர் யார் என்று கொஞ்சம் கூட  ரசிகர்களால் கண்டு பிடிக்க முடியாத ஒரு சீசன் என்றால் அது சீசன் 7 மட்டுமே. அந்த அளவுக்கு பட்டைய கிளப்பிய சீசன் என்று சொல்லலாம் . 

அதில் போட்டியாளர் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ரவீனா. தன்னுடைய சிரிப்பின் மூலமே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரவீனா என்று பிரபலமானதை  விட மணி ரவீனா என்று தான் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமானார் . 

எனினும், பிக் பாஸ் வீட்டில் இவர்கள் நண்பர்களா? காதலர்களா? என்று பிக் பாஸ் கூட குழம்பும்  அளவிற்கு இவர்களின் உறவு தொடர்ந்தது.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு அடைந்த பின்னரும், மீண்டும் தமது காதல் வானில் பறக்க ஆரம்பித்து உள்ளார்கள்.

அதன்படி, ரவீனா - மணி ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து ரீலிஸ் செய்வது, போட்டோக்களை வெளியிடுவது என ரொம்ப சந்தோசமாக தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.


இந்த நிலையில் தற்போது, பிக் பாஸ் பிரபலமும், சின்னத்திரை நடிகையுமான ரவீனா, தனது கியூட் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் பகிந்த பதிவில், 'வெறுப்பவர்களை வெறுப்பதில் எனக்கு நேரமோ, ஆற்றலோ, ஆர்வமோ இல்லை. நான் காதலர்களை நேசிப்பதில் பிஸியாக இருக்கிறேன்..' எனவும் பதிவிட்டுள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்...,,


Advertisement

Advertisement