• Oct 15 2026

வாழ்க்கையே மாறிப்போச்சு... 'நாகினி' சீரியல் நடிகை குறித்து வெளியான திடுக்கிடும் உண்மை

shali / 1 month ago

Advertisement

Listen News!

‘நாகினி’ சீரியல் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மௌனி ராய். தொலைக்காட்சி தொடர்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே, கடந்த 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மௌனி ராய் அவரை பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பின்னடைவு அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் சவால்களையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு ஆன்மிகம் முக்கிய பங்காற்றியதாக மௌனி ராய் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பகவத் கீதையை பலமுறை ஆழமாக படித்து, அதன் கருத்துகளையும் போதனைகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

பகவத் கீதையின் போதனைகள் வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், மனதில் ஏற்பட்ட குழப்பங்களை தெளிவுபடுத்தவும் தனக்கு உதவியதாகவும், அதன் மூலம் மன அமைதியை பெற்றதாகவும் மௌனி ராய் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.


Advertisement

Advertisement