லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்றையதினம் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் முதல் நாள் மாஸ் காட்டியுள்ளது.
உலகளவில் முதல் நாள் ரூ.155 கோடி முதல் ரூ.160 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதேவேளை லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, உலகளவில் முதல் நாள் ரூ. 148 கோடி வசூல் செய்திருந்தது.
உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக இதுவே இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் கூலி படத்தின் மீதி வைக்கப்பட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கூலி திரைப்படம் இனி வரும் நாட்களில் என்னென்ன சாதனைகளை படைக்கபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் திரையுலகத்தினர்.
Listen News!