• Sep 04 2025

இனி பிறந்த குழந்தை கூட கூலி கூலினு தான் கத்தும்..! கிண்டல் பண்ணிய பிரபலம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தியத் திரை உலகில் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைத் தான் பெற்றது. அதற்கு பின்பு ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து சுமார் 5000 திரையரங்குகளில் பிரமாண்டமாக கூலி திரைப்படம் நேற்றைய தினம் வெளியானது. இந்த படத்தின் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் வந்து உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் தியேட்டர்கள் முழுவதும் திருவிழா போலவே காட்சியளித்தன.


இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் வழமை போல கூலி திரைப்படத்தையும் பங்கம் செய்துள்ளார்.  தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.


அதன்படி அவர் குறித்த போஸ்டில்,  பிறந்த குழந்தை இனி குவா குவா என்று சொல்லாது கூலி கூலி என்று தான் சொல்லும்  என்று கிண்டல் செய்துள்ளார்.

நேற்றைய தினம் கூலி திரைப்படம் வெளியான போது இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கூலி திரைப்படம் பற்றி தனது கருத்தை தெரிவித்த நிலையிலேயே ப்ளூ சட்டை மாறன் பங்கம் பண்ணியுள்ளார்.  இதோ அந்த வீடியோ,



Advertisement

Advertisement