• Jan 28 2026

Leo Box Office; உலகளவில் வெற்றிநடை போடும் லியோ! தமிழ்நாட்டில் தொடர்ந்து மிளிரும் வசூல் சாதனை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த  19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது.இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை தொட்டது எனலாம்.

லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல வலிமையான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

லியோ படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் லியோ படம் இதுவரையில் திரையிடப்பட்டு வருகின்றது.


முல் நாளில் மட்டுமே சுமார் 148.5 கோடி வசூல் செய்த லியோ படம், உலகளவில் சுமார் 550 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில், லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 200 கோடி வசூலித்துள்ளதாக  பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலருக்குப் பிறகு இந்தாண்டு தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை கடந்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ.

Advertisement

Advertisement