• Jan 18 2025

ஜெனி எடுத்த விபரித முடிவு; இருவர் நடுவில் சிக்கித் தவிக்கும் செழியன்!மீளா வருத்தத்தில் பாக்கியா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இனி என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

இதுவரையில், மாலினியுடன் பேசிய பாக்கியா என் பிள்ள கூட பேச்சு வார்த்த வைக்காத என சொல்ல, அவன் என்ன கல்யாணம் பண்றன் என்றுசொல்லி ஏமாத்திட்டான். என்று அழுது புலம்பி இறுதியில் செழியன் வீட்டிற்கு வந்து அனைவரையும் கூப்பிடுவது போல இறுதி ப்ரோமோ வெளியானது.

இதையடுத்து, செழியன் வீட்டிற்கு வந்த மாலினி நடந்த அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறார்.அத்துடன் ஜெனியின் போனுக்கு தன்னிடம் உள்ள போட்டோ, வீடியோ என ஆதாரங்களை அனுப்புகிறார்.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெனி, உன்ன எவ்ளோ நம்பினான் இப்படி பண்ணிட்டியே செழியா என கோவப்படுகிறார். எனினும், நான் தப்பு பண்ணிட்டன் தான், அவ மேல பாவப்பட்டு கதைச்சிட்டன், ஆனா எனக்கு நீயும் குழந்தையும் தான் முக்கியம் என கெஞ்சுகிறார்.

எனினும், உண்மையை தெரிந்த ஜெனி என்ன முடிவு எடுக்க போகிறார் என தெரியவில்லை. ஆனாலும் அவர் செழியனை பிரிந்து தன் அம்மாவிடம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ட வாழ்க்கைய போல ஜெனிட வாழ்க்கைய போக விட மாட்டன் என பாக்கியாவும் ஒரு முடிவில் உள்ளார்.

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். இனி வரும் நாட்கள் எவ்வாறு நகர்ப்போகிறது என்பதை...

இரண்டாம் இணைப்பு ; சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் உண்மை அனைத்தையும் தெரிந்த ஜெனி வீட்டை விட்டு தன் குழந்தையுடன் வெளியிருக்கிறார். பாக்கியா தடுத்தும்' போதும் ஆன்டி நீங்க பண்ணினது எல்லாம்.போய் உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று வெளியே செல்கிறார்.

Advertisement

Advertisement