• Oct 09 2024

விக்ரம் வேதா சீரியல் நாயகனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?- அழகிய குடும்பப் போட்டோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர்கள் வெற்றி பெற்ற அல்லது பிரபலமான திரைப்படங்கள் பெயராகவே இருக்கும்.இதற்கு சம்பந்தபட்ட படத்தின் தயாரிப்பாளர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதால் இன்றுவரை திரைப்படங்களின் பெயரில் தொலைக்காட்சி தொடர் தயாரித்து ஒளிபரப்பாவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை இத்தொடரில் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபிஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி), வருண் உதய்(ஆதித்யா), சுனிதா (மிருணாளினி) மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


விக்ரம் மற்றும் வேதா இருவரும் இரு துருவங்கள். எப்போதும் உடன்பட முடியாத வலுவான கருத்துகள் அவர்களுக்குள் ஏற்படும். அவர்கள் எளிதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள்.இருப்பினும் அண்மையில் மகளுக்காக திருமணம் செய்து கொண்டனர்.

இப்படியான நிலையில் தற்பொழுது விக்ரமின் சொந்த குடும்பத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.அதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement