2023ம் ஆண்டில் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'ஜெயிலர்' திரைப்படம், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் வரவேற்பு பெற்றதுடன், இயக்குநர் நெல்சனின் இயக்கத்திறமையையும் வெளிக்கொண்டு வந்தது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டையில் புதிய மைல்கல்லை பதித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜெயிலர் 2' உருவாகும் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டு, படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
ரஜினியின் மாஸான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் கலவையோடு ‘ஜெயிலர்’ படம் பெரிய அளவில் ஹிட்டான பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான திட்டத்தை நெல்சன் எடுப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, படத்தின் ஷூட்டிங் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
படத்தில் முன்னாள் கதாப்பாத்திரங்களில் சிலர் மீண்டும் திரும்பவுள்ளதாகவும், கூடுதலான கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் இணையவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் மின்னிய மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தற்போது 'ஜெயிலர் 2' படத்திலும் மீண்டும் அதேபோன்ற முக்கிய வேடத்தில் இணைகிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இயக்குநர் நெல்சன் மற்றும் மோகன்லால் சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தில் இருவரும் ஜெயிலர் 2 படம் பற்றிய கருத்துக்களை கதைத்துள்ளனர் எனத் தெரிகிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!