• Apr 01 2025

தனுஷின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புதுப்பேட்டை’. தனுஷ், சினேகா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவான இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார் என்பதும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் இந்த படத்தின் பாதிப்பு சினிமா ரசிகர்களிடம் உள்ளது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று அவ்வப்போது செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.



இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ’புதுப்பேட்டை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ’புதுப்பேட்டை 2’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் விரிவான தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

’புதுப்பேட்டை’ திரைப்படத்தில் குமாரு என்ற கேரக்டரில் நடித்த தனுஷ் கிளைமாக்ஸில் தனது மகனை ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சென்று விடுவார். அந்த குழந்தையை ஒரு பெண் எடுத்து வளர்க்கும் நிலையில் அந்த குழந்தை பெரியவனாகி என்ன செய்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தனுஷின் ரசிகர்களுக்கு ’புதுப்பேட்டை 2’ திரைப்படம் ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement