• Jan 19 2025

அப்பர் பெர்த்தில் ரயில் பயணம்.. குஷ்பு பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பு நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரயிலில் அப்பர் பெர்த்தில் பயணம் செய்ததாக புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரை உலகில் ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் குஷ்பு என்பதும் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 வருடங்கள் தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த குஷ்பு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பாக சுந்தர் சி இயக்கும் படங்களை அவர் தான் தயாரித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் குஷ்பு ஈடுபட்டு வருகிறார் என்பதும் திமுக , காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த குஷ்பு அதன் பின்னர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குஷ்பு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்கள் தன்னுடைய கணவர் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயிலில் பயணம் செய்வதாகவும் பழைய நினைவுகள் தனக்கு நிரம்பி வழிகின்றன என்று கூறியுள்ள அவர், ரயில் பயணத்தின் போது தோழிகளுடன் அரட்டை, உணவை பகிர்ந்து சாப்பிட்டது மற்றும் போர்டு விளையாட்டு விளையாடுதல் ஆகியவை மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறு வயதில் தான் அப்பர் பெர்த்தில்  படுத்து கொண்டு பயணம் செய்ய  விரும்பியதாகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஒருமுறை அப்பர் பெர்த்தில் படுத்து கொண்டு பயணம் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அப்பர் பெர்த்தில்  படுத்து கொண்டு எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement