• Apr 03 2025

ஐபிஎல் ஃப்ரீ டிக்கெட் கொடுக்கிறாரா விஜய் டிவி குரேஷி.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இதற்கான டிக்கெட்டுகள் சமீபத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது என்பதும் ஒரு சில நிமிடங்களில் அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதால் ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்தார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் டிவி குரேஷி தனது யூடியூப் பக்கத்தில் தனது சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் டிக்கெட் ஆன்லைன் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் எப்படி டிக்கெட் கிடைத்தது என்று பலர் கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோ கடந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறும் போது வெளியானது என்றும் கடந்த ஆண்டு என்னுடைய யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் 40 டிக்கெட் கொடுப்பதற்காக எடுத்து வைத்திருந்தேன் என்றும் ஆனால் அதை அந்த வீடியோவை இந்த ஆண்டு யாரோ பயன்படுத்தி மோசடி செய்திருக்கிறார்கள் என்றும் அது போன வருடம் வெளியான வீடியோ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஐபிஎல் போட்டிகள் குறித்து பல மோசடிகள் சமூக வலைதள பக்கங்களில் நடந்து வரும் நிலையில் ஒரு சிலர் என்னுடைய பழைய வீடியோவை வைத்து மோசடி செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்றும், இதுபோன்ற மோசடியான விளம்பரத்தை நம்பாதீர்கள் என்றும் அவர் ஐபிஎல் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement

Advertisement