• Jan 19 2025

அஜித்தின் உடல் நல ரகசியத்தை குடும்பத்தினர் மறைத்தார்களா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது என்பது அதன் பிறகு அவர் குணமாகி வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அவர் மீண்டும் பைக் டூருக்கு கிளம்பி விட்ட நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை குறித்த சில ரகசியங்களை குடும்பத்தினர் மறைத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருவதாக தெரிகிறது.

இரண்டே நாள் சிகிச்சையில் அவர் வீடு திரும்பி விட்டாலும் வேறு ஒரு மருத்துவமனையில் ரகசியமாக முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த பரிசோதனைகளில் இருந்து பல நாட்களுக்கு முன் படப்பிடிப்பின் போது நடந்த வாகன விபத்து தான் தற்போதைய பாதிப்பு காரணம் என்றும் கூறப்பட்டதாம்

அப்போது அஜீத் அதை சரியாக கவனிக்காமல் சாதாரண சிகிச்சையுடன் முடித்துக் கொண்டதாகவும் அந்த பிரச்சனை தான் பெரிதாகி தற்போது முக்கிய பாகத்தை பாதிக்க வைத்ததாகவும் டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இப்போதைக்கு எந்த பயமும் இல்லை என்றாலும் வீட்டில் சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் அதனால்தான்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு கூட ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக தான் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது

 அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் கூறினாலும் இந்த தகவல்கள் உண்மை இல்லை என்றும் அஜித்துக்கு உடல் பாதிப்பு இருந்தால் அவர் எப்படி பைக் டூர் கிளம்பி இருப்பார் என்பதும் அஜித் தற்போது முழுமையான உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அஜித்துக்கு பெரிய பிரச்சனை என்பது முழுக்க முழுக்க பொய் என்றும் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement