• Nov 10 2025

Abhinay_யின் இறுதிச் சடங்கை முன்னின்று செய்யப்போகும் KPY பாலா

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

'துள்ளுவதோ இளமை'  என்ற படத்தின் மூலம்  பிரபலமானவர் நடிகர் அபிநய்.. இந்த படத்தை தொடர்ந்து தாஸ், என்றென்றும் புன்னகை  போன்ற படங்களிலும், ஒருசில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.  எனினும் இவருக்கு  சரியான வாய்ப்புகள் கிடைக்காததால்  வறுமையில் சிக்கினார். 

ஒரு கட்டத்தில்  கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, எலும்பும் தோலுமாக,  வயிறு வீங்கியபடி காட்சி அளித்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மேலும் இவருடைய மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இதை தொடர்ந்து தனுஷ், கேபிஓய் பாலா ஆகியோர் நேரிலே சென்று பண உதவி செய்தனர். அவர் அந்த நோயிலிருந்து மீண்டு வருவார் என அனைவரும் நம்பி இருந்த நிலையில், இன்று அதிகாலை அவர்  காலமானார். 

இவர் உயிரிழந்த செய்தியை அறிந்த நண்பர்கள்   நடிகர் அபிநய். வாடகைக்கு இருந்த வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் யாரையும் உள்ளே வரக்கூடாது என்று தகராறு செய்துள்ளார்.  காலையில் ஒருவர் வந்து அவரை பார்த்த போது தான் நடிகர் அபிநய் உயிரிழந்தது தெரியவந்தது. 


நடிகர் அபிநய்க்கு உறவுகள் என்று யாரும் இல்லாத காரணத்தினால் இறுதிச் சடங்கை எப்படி செய்வது என்றும்,  அவருடைய உறவுகள் எங்கே என்றும் தேடி வருகின்றனர்,  மேலும் அவருடைய இறுதிச் சடங்கு செய்வதில் குழப்பம் இருப்பதால் காவல்துறையிடம் இன்று மாலை வரை நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, 

இந்த நிலையில்ம், நடிகர் அபிநயின் இறுதிச்சடங்கிற்கான மொத்த பொறுப்பையும்  கேபிஒய் பாலா  பொறுப்பேற்றுள்ளதாக  தற்போது சமூக வலைத்தளங்களில்  தகவல்கள் பரவி உள்ளன. 

 ஏற்கனவே அவர் உடல் நலக்குறைவால் இருந்தபோது அவரை நேரில் சந்தித்து தன்னால் இயன்ற பண உதவியை பாலா செய்தார். தற்போது அவருடைய இறுதிச்சடங்கையும் முன்னின்று செய்வதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement