• May 21 2024

படு கவர்ச்சியாக வீடியோ வெளியிட்ட கிரண்…ரன்வீருக்கு ஆதரவா..?கேள்வி எழுப்பிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் தமிழ் சினிமாவில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஜெமினி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியினை தேடிக் கொடுத்தமையினால் அடுத்ததாக தல அஜித்துடன் 'வில்லன்' என்ற படத்தின் மூலம் இணைந்தார். அந்தப் படமும் பெரியளவில் ஹிட்டாக அதனைத் தொடர்ந்து 'வின்னர்' படத்தில் பிரசாந்திற்கு ஜோடியானார். வின்னர் படமும் மெகா ஹிட்டானது.

இதனால் உலகநாயகனுடன் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து 'அன்பே சிவம்' என்ற படத்தில் நடித்தார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தமையினால் கோலிவுட்டில் கிரண் பெரிய ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு பிறகு வந்த படங்கள் யாவும் தோல்வியை சந்திக்க சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார் கிரண். அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடலுக்கு நடனமாடி வந்தார். மேலும் 'ஆம்பள, முத்தின கத்திரிக்கா, சகுனி' போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கொஞ்சமும் அசராத கிரண் சமூக வலைத்தளப் பக்கமாக தனது கவனத்தை திசை திரும்பியுள்ளார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருப்பார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பகிர்வதும் அதனை ரசிகர்கள் அதிகம் லைக்ஸ், கமெண்ட் செய்வதும் வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் நடிகை கிரண் தற்போது அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதனால் கமெண்ட் செக்‌ஷனையும் ஆஃப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதைப் பார்த்த கிரண் ரசிகர்கள், சமீபத்தில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத் தான் கிரண் இத்தகைய வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளதாக கூறி வருகின்றனர். கிரண் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருவதோடு பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement