• May 18 2024

மீண்டும் DCEU வில் இணையவுள்ள முக்கிய நடிகர்...மகிழ்ச்சியின் உச்சத்தில் ஹாலிவுட் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பென் அஃப்லெக் அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகப்பட்ட திறமைகளைக் கொண்ட இவர் இரண்டு அக்கடமி விருதுகளையும், 3 கோல்டன் கிளப் விருதுகளையும் பெற்றுள்ளார். 1984 மற்றும் 1988 இல் ஒளிபரப்பான 'வோயேஜ் ஆஃப் தி மிமி' என்ற கல்வித் தொடரில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இதன் பின்னர் இவரது நடிப்பில் வெளியாகிய ஏனைய படங்களாக 'மல்ராட்ஸ், சேசிங் ஆமி, கான் கேர்ள், தி அக்கவுண்டன்ட், டிரிபிள் பிரான்டியர் மற்றும் டாக்மா' உள்ளிட்ட பல்வேறு படங்களைக் குறிப்பிடலாம். மேலும் 1997 இல் 'குட் வில் ஹண்டிங்' என்ற படத்துக்கு திரைக்கதை எழுதியதற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றுக் கொண்டார்.

ஹாலிவுட் சினிமாவில் தனது பன்முகப்பட்ட திறமையை விரிவுபடுத்திக்கொண்ட இவர் பாடகராகவும், நடனக் கலைஞராகவும் திகழும் பன்முகப்பட்ட திறமைகளைக் கொண்ட நடிகை ஜெனிஃபர் லோபெஸ் என்பவரை 2022 இல் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 'டிசி எக்ஸ்டெண்ட் யுனிவர்ஸ்' ஆகும். இப்படத்தில் இவர் பேட்மேன் ஆக நடிக்கின்றார். இருப்பினும் ஜாக் ஸ்னைடர் என்பவரின் 'பேட்மேன் வி சூப்பர்மேன்' லீக்கில் ஸ்ரூடியோ குழப்பமடைந்ததை அடுத்து, நடிகர் ஹென்றி கேவில் மற்றும் நடிகர் பென் அஃப்லெக் ஆகியோர் வார்னர் பிரதர்ஸ் உடனான சண்டைக்குப் பிறகு DCEU இல் நடிப்பதிலிருந்து வெளியேறினர்.

இருப்பினும் இவர் 'தி ஃப்ளாஷ்' என்ற மற்றுமோர் திரைப்படத்தில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் எஸ்ரா மில்லரின் கைதினைத் தொடர்ந்து அதன் சாத்தியப்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் 'அக்வாமேன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் 'ஜேசன் மோமோவா' தனது இன்ஸ்டாகிராமில் 'தி லாஸ்ட் கிங்டம்' என்று குறிப்பிட்டு 'அக்வாமேன்' தொடர்ச்சியில் புரூஸ் வெய்ன் - பேட்மேனாக பென் அஃப்லெக் மீளவும் நடிப்பார் என வெளியிட்டார்.

அதுமட்டுமல்லாது ஜேசன் மோமோவா தானும் பென் அஃப்லெக்கும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டார். ஸ்ரூடியோவிற்கு வெளியே இருக்கும் சுற்றுப்பயணக் குழுவின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். எனவே மீளவும் DCEU வில் இணையும் பென் அஃப்லெக்குவிற்கு ரசிகர்கள் தமது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளிப்படுத்தி வருகின்ற விடயம் இணையத்தில் வைரலாகி வருவதை காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement