• May 10 2024

38 வயசிலும் மூப்பின்றி இருக்கும் நடிகை சதா…இந்த வயசிலும் இப்படி இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற திரையுலக நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சதா. இவரது தாய்மொழி மராத்தி ஆனாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து கலக்கியிருந்தார். இவர் 2003-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் இவரோடு இணைந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் 'ஜெயம்' படத்திற்கு பிறகு சதாவிற்கு பிரம்மாண்ட இயக்குநரான சங்கர் இயக்கத்தில் 'அந்தியன்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதிலும் தனது சிறப்பான நடிப்பினையே வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து 'வ ர்ண ஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேசம், எலி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான திரைப்பட வாய்ப்புக்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.

எந்த படத்தை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலையே உருவானது. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான “மைதிலி” என்ற திரைப்படத்தில் வரலாறு காணாத அளவிற்கு தனது கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார் சதா.

மேலும் 2021-ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'டார்ச் லைட்' என்ற படத்தில் சதா நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தற்போது நடத்தி வருகிறார்.

இவ்வாறு பிஸியாக இருந்து வரும் நடிகை சதா சமூக வலைத்தளங்களில் அதனை விட ரொம்ப பிஸியாக இருந்து வருகின்றார். அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் சமீபத்திலும் இவர் சாறி அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.

38 வயதை கடந்து விட்ட நிலையிலும் இவர் கொஞ்சமும் மூப்பின்றி இளமையாகவே அதில் காட்சி அளிக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement