• May 18 2024

பரந்த மனப்பான்மையுடன் ரஜினி செய்த செயல்...பாராட்டும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் முக்கிய நடிகராகக் கொண்டாடப்படுபவர் ரஜனிகாந்த். தென்னிந்தியத் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகராகத் திகழும் இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ஆரம்ப காலத்தில் பஸ் நடத்துனராக வேலை பார்த்த இவர், 1973 இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.

தமிழ் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2007-ஆம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன் மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கிஜானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.

இவர் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.

இந்நிலையில் இவரைக் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அது என்னவெனில் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கார்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் ரஜனியும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதற்காக இவரை வீட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை நடிகர் ரஜனி தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தி உள்ளார்.

பரந்த மனப்பான்மை கொண்ட நடிகர் ரஜனிகாந்த் தன்னை மதிப்பவர்களை மதிக்கும் பக்குவம் கொண்ட நபராகவும், தென்னிந்திய சினிமாவில் மற்றைய நடிகர்களை விட தனித்துவமான பண்புகளுடன் விளங்கும் சிறந்த நடிகராகவே இன்றுவரை வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு ரஜனி போலீஸாரை கௌரவப்படுத்திய விடயம் சினிமா வட்டாரத்தில் பெரிதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement