• May 11 2024

நம்ம விராட் கோலியின் மனைவியா இது..? வைரலாகும் லேட்டஸ் போட்டோ ஷூட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி வகிக்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.பொதுவாக ஹிந்தி திரைப்படங்களிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். இவர் 2008-ஆம் ஆண்டு வெளிவந்த 'ரப் நே பனா தி ஜோடி' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஹிந்தி சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகத் திகழும் இவர் 'போர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி' லிஸ்ட்டில் 30 வது இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகிய 'பத்மாஷ் கொம்பனி, பேண்ட் பாஜா பாராத், பாட்டியாலா ஹவுஸ், பெண்கள் vs ரிக்கி பாஹ்ல் போன்ற முக்கிய திரைப்படங்களையும் இவை தவிர வேறு பல படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தியமையால் தனது அறிமுக திரைப்படமான 'ரப் நே பனா தி ஜோடி' யில் நடித்தமைக்கு சிறந்த நடிகைக்கான ஹாலிவுட் விருது இவருக்கு கிடைத்தது.

தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் 2017-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான விராட் கோலியைத் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் சிறப்புற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இவர்களுக்கு 2021 இல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

மேலும் மனிஷ் மல்கோத்ரா, பிரசாத் பிடப்பா போன்ற பேஷன் டிஸைனர்ஸ் நடத்தும் பேஷன் ஷோவில் பங்குபற்றி ரம் வால்க் செய்து அதனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது இவரது அழகிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்படுவதுண்டு.

அந்தவகையில் இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படத்தையும், தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்.

அந்தவகையில் இவர் சமீபத்தில் பாரிஸில் தேநீர் அருந்தி, ஸ்னாப்ஸ் சாப்பிடும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இவ் அழகிய புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ரசிகர்களால் லைக்ஸ் செய்யப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement