• Apr 13 2025

கயல் ஹீரோயினுக்கு கிஸ் பண்ணப்போ ரொம்ப பீல் பண்ணாங்க.. சஞ்சீவ் சொன்ன சீக்ரெட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக காணப்படுகின்றார்கள்.  சினிமா நடிகர்கள் மட்டுமில்லாமல் சீரியல் நடிகர்களும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடருகின்றார்கள்.

அந்த வகையில்  ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடி  பலருக்கும் பரீட்சையமான தம்பதிகளாக காணப்படுகின்றார்கள். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் ரியல் ஜோடியாகவே மாறினார்கள். அதற்கு முன்பே விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆலியா. இதன் போதே அவருக்கு அதிகளவான ரசிகர்கள் உருவாகினர்.

இவர்கள் இருவரும் காதலித்து பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் புதிதாக கட்டிய  புது வீடு பற்றியும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார்கள்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் கதா நாயகனாக சஞ்சீவ் நடித்துக் கொண்டிருக்க, அதே சேனலில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்தார். இனியா சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.


இந்த நிலையில், ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடி பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. இதன்போது சஞ்சீவ் கூறுகையில், தான் கயல் சீரியலில் நடிக்கும் போது அதன் கதாநாயகி கன்னத்தில் கிஸ் கொடுப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டது. அதை பார்த்து ஆலியா ரொம்பவும் பீல் பண்ணினாங்க.

ஆனால் இனியா சீரியலில் நடிக்கும் போது ஆலியா மானசா ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். அப்போது எனக்கு எப்படி இருக்கும்.. அதுவும் பெட்ரூம்ல கலர் கலரா லைட் போட்டு.. அந்த சீன் இருந்துச்சு.. என்று சஞ்சீவ் கலக்கலாக பேசியிருந்தார்.

அதற்கு ஆலியா நான் அண்ணன் என்று நினைத்து தான் நடித்தேன் என்று சொல்ல, அப்படி என்றால் நானும் தங்கை என்று நினைத்து தான் நடித்தேன் என இருவரும் கலக்கலாக பேசி கொடுத்த பேட்டி  தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement