பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, அரசி ரோட்டில நடந்து வரும் போது குமாரைப் பார்க்கிறார். அதைப் பார்த்த குமார் அரசி பின்னாடியே போய் என்னை மன்னிச்சிடு என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து அங்க சரவணன் வந்து நிக்கிறார். பின் சரவணன் குமாரைப் பார்த்து என்னடா பண்ணுற என்று கோபமாக கேட்கிறார். அதுக்கு குமார் சும்மா பேசத் தான் வந்தேன் என்கிறார்.
அதைக் கேட்ட சரவணன் என்ர தங்கச்சியோட உனக்கு என்னடா பேச இருக்கு என்று கேட்கிறார். அதனை அடுத்து ரெண்டு பேரும் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த அரசி அண்ணா இப்புடி எல்லாம் பண்ணாத என்று சொல்லுறார். பின் ராஜி கதிர் கிட்ட டான்ஸ் போட்டியில கலந்துக்கவா என்று கேட்கிறார்.
இதைக் கேட்ட பழனி சென்னைக்கு போய் கலந்துக்க போறியா என்று கேட்கிறார். அப்ப கோமதி வந்து நாங்கள் உன்ன போக வேணாம் என்று தானே சொன்னாங்க பிறகு ஏன் இதைப் பற்றி கதைக்கிற என்று கேட்கிறார். கதிரும் இந்த போட்டியில கலந்து கொள்ள வேணாம் என்கிறார். பின் ராஜி போட்டியில கலந்து கொள்ள சம்மதம் தந்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.
பின் ராஜி பாண்டியன் கிட்ட அதில கலந்து கொள்ள சம்மதம் சொல்லுங்க என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் வீட்டில இருக்கிற யாருக்குமே விருப்பம் இல்ல இதையும் மீறி நீ போறதா இருந்தா தாராளமா போகலாம் என்கிறார். இதனை அடுத்து கதிர் ராஜி கிட்ட இந்த போட்டியில கலந்து கொண்டு நீ காசு கொண்டு வந்து தந்தாலும் நான் வாங்க மாட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!