பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் ஆகியோர் நடிப்பில் வரும் "குட் பேட் அக்லி" திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கிற்கு வரவுள்ளது. இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாள 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் ரிலீஸ் தேதியைக் கண்டுகொண்டும் படத்துக்கான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் படத்தின் ப்ரீமியர் ஷோ வெளியீட்டிற்கு முதல்நாள் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டது ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அஜித் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. திருச்சி ஸ்ரீதர் என்ற மலேசியாவில் நண்பர் ஒருவர் "குட் பேட் அக்லி" படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை பார்த்ததாக கூறியுள்ளார்.
அவர் இந்தப் படம் அஜித் அவருடைய முன்னாள் படங்களான "சிட்டிசன்", "தீனா", "பில்லா", "மங்காத்தா" போன்றவற்றின் கலவையாக இருக்குமென குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் காட்சிகள் ரசிகர்களை மிகவும் திருப்திப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை சம்பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!