சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியாகிய " bachlor " திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிய திவ்யா பாரதி தொடர்ந்து "மகாராஜா ","kingston" போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் சமீபத்தில் ஜி .வி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியாகிய "kingston" திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது.
தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமாருடன் காதல் கிசு கிசுக்களிற்கு முகம் கொடுத்தார். இதனால் அண்மையில் நேர்காணல் ஒன்றில் இது வதந்தி என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று "YOLO I'm from Ulundurpettai " திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "bachlor" பட இயக்குநர் அருகில் நின்ற ஒருவரை பார்த்து " நான் எங்க போனாலும் திவ்யா பாரதிய கேப்பாங்க அந்த திவ்யா பாரதிய அறிமுகப்படுத்தியதே இவர் தான் ஒரு நாள் பிளைட்ல உக்காந்து இந்த மாதிரி ஒரு பொண்ணு இருக்கா பாருங்க அண்ணா எண்டு அவங்களோட வீடியோ காட்டினார். நான் அப்போதான் ஒரு ஹீரோயின் சந்திக்க போறேன் அவங்க வேணாம்னு சொன்னா இவங்கள வைச்சு பண்ணிடலாம்னு சொன்னேன் அந்த மாதிரியே நான் பார்க்க சென்ற நடிகை வேண்டாம்னு சொன்னதும் இவங்க சம்மதிச்சாங்க " என கூறியுள்ளார்.
Listen News!