• Dec 18 2025

திரையரங்கில் பட்டையை கிளப்பிய "காந்தா".. தற்பொழுது ஓடிடியில்.. வெளியீட்டுத் தேதி இதோ.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் துல்கர் சல்மான், தனது தனித்துவமான நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதை எப்போதும் கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நாலு மொழிகளிலும் ரசிகர்கள் கொண்டுள்ள துல்கர், சமீபத்தில் வெளியான "காந்தா" படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை அனைவரையும் ஈர்த்துள்ளார்.


செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவான "காந்தா", நவம்பர் 14, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலிருந்து நல்ல வரவேற்பையும், திரையரங்குகளில் நிலையான ஓட்டத்தையும் பெற்றிருந்த இந்த திரைப்படம், தற்போது OTT ரசிகர்களுக்காக ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது.

துல்கர் சல்மானின் நடிப்பில் உருவான இந்த படம், நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நாளில் வெளியானது. பல்வேறு மாநில ரசிகர்களும் ஒன்றாக இணைந்து துல்கரின் படத்தை கொண்டாடும் வகையில் இந்த பன்மொழி வெளியீடு அமைந்திருந்தது.


இந்தப் படத்தை டிசம்பர் 12 முதல் Netflix-ல் அதிகாரபூர்வமாக ஸ்ட்ரீம் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது OTT ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையரங்கில் படம் பார்க்க முடியாத பலருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 

Advertisement

Advertisement