தமிழ் திரையுலகில் எளிமையும், ஒழுக்கமும், மனிதநேயமும் கொண்ட நடிகராக திகழும் அஜித்துக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களில் மட்டுமல்லாது, அதற்கு வெளியிலும் அவர் காட்டும் தனித்துவமான பண்பு மற்றும் நேர்மை, அவரை ரசிகர்களின் மனதில் என்றும் உயர்ந்த இடத்தில் நிறுத்துகிறது. தற்போது, அஜித் தனது ரேஸிங் கனவை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

அஜித் தற்பொழுது மலேஷியாவில் நடைபெறும் கார் ரேஸில் பங்குபெற்றி வருகிறார். இத்தகவல் தெரிய வந்ததும், அங்குள்ள தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவிலிருந்து பயணம் செய்த ரசிகர்கள் பெருமளவில் மைதானத்தில் கூடி, அவரை கண்டு உற்சாகம் அடைந்து கொண்டனர்.
ஆனால் இந்த அன்பு, அஜித்தை சற்று டென்ஷனாக்கிய தருணமொன்று நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில், ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டபோது, அவர்கள் அப்பகுதியில் உள்ள மற்ற ரேசர்கள், மற்ற அணிகளை தொந்தரவு செய்துள்ளனர். இதற்கு அஜித் மிகுந்த பணிவுடனும், மனச்சாட்சியுடனும் ரசிகர்களிடம் அறிவுரை கூறியுள்ளார்.

அதன்போது அவர், “தயவு செய்து மத்த அணியினரை தொந்தரவு செய்யாதீர்கள். இது உங்களுடைய நற்பெயருக்கு கேடு விளைவிக்கும். என்னுடைய பெயர் மட்டும் அல்ல, உங்களுடைய பெயரும் கெட்டுப்போய்விடும். எனக்கு ஒவ்வொருவரிடமும் சொல்ல ஆசை. ஆனால் நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள்.”என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள், அஜித்தின் நாகரிகத்தையும், அவர் ரசிகர்களை எவ்வளவு அன்புடன் கருதுகிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. அவர் தன்னுடைய ரசிகர்களின் பெயர் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே அவர்களை எச்சரித்தார் என்பது, சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டது.
Listen News!