சமூக வலைத்தளங்களில் நல்ல செயல்களும், சேவை மனப்பான்மையும் பெரிதும் பாராட்டப்படும் போது, சில நேரங்களில் விமர்சனங்களும் எழுவது இயல்பு. யார் எந்த செயலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது அவர்களின் பார்வையைப் பொறுத்தது. தற்போது இதேபோன்ற ஒரு விவாதத்தின் மையமாக இருப்பவர் நடிகர் KPY பாலா.

சமீபத்தில், சேதமடைந்த சாலையைத் தன்னால் முடிந்த அளவு சரிசெய்து, அதனை ஒரு வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் KPY பாலா. அந்த வீடியோ சிலரிடம் பாராட்டும் பெற்றது, ஆனால் சிலரிடம் கேள்விகளையும் எழுப்பியது. அதில் ஒருவர் விஜே ஆதவன். அவர் இதைப் பற்றி தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
குறிப்பாக, நடிகர் விஜே ஆதவன், “உதவி செய்றது தப்பில்ல.. ஆனா அத காமெரா வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணுறது தான் தப்பு. உதவி செய்றத வீடியோ போட்டு கொடுத்தத விட அதிகமா சம்பாதிச்சுடுவாங்க... நானே என்கிட்ட அவர் நம்பர் வேணும்னு கேட்டவங்களுக்கு நம்பர் கொடுத்து இருக்கேன்.

ஆனா, அவர் போனே எடுக்கமாட்டார். பிளாக் பாண்டி அவ்ளோ உதவி செய்றார்... அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க... ஆனா, உதவி செய்யுறத 4k வீடியோ எடுத்துப் போட்டால் பார்க்கிறாங்க." எனக் கூறியுள்ளார்.
விஜே ஆதவனின் கருத்து வைரலாகி வரும் நிலையில், KPY பாலா இதற்கு தன்னுடைய பதிலை அளிப்பாரா? அல்லது அமைதியாக புறக்கணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!